×

ஆலப்புழா அருகே மனைவியின் இறுதி சடங்கில் கணவன் சுருண்டு விழுந்து பலி

*சாவிலும் இணை பிரியாத தம்பதி

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உடல் நலக்குறைவால் மரணமடைந்த மனைவியின் இறுதி சடங்கை நடத்தி கொண்டிருந்த போது கணவன் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்தார்.கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள அம்பலப்புழா பகுதியை சேர்ந்தவர் முகம்மது (68). அவரது மனைவி ரஷீதா (60). இந்த தம்பதிக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இந்தநிலையில் ரஷீதாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து அவரை ஆலப்புழாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ரஷீதா மரணமடைந்தார். இதையடுத்து அவரது உடலை அருகில் உள்ள பள்ளிவாசல் மயானத்தில் அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டது.மயானத்திற்கு கொண்டு செல்வதற்கு முன்பு முகம்மது தனது மனைவியை கடைசியாக பார்ப்பதற்கு உடலின் அருகே சென்றார். அப்போது திடீரென அவர் மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முகம்மது மரணமடைந்தார். அதன் பிறகு 2 பேரின் உடல்களும் பள்ளிவாசல் மயானத்தில் அடுத்தடுத்து அடக்கம் செய்யப்பட்டது.

The post ஆலப்புழா அருகே மனைவியின் இறுதி சடங்கில் கணவன் சுருண்டு விழுந்து பலி appeared first on Dinakaran.

Tags : Alappuzha ,Thiruvananthapuram ,Sai ,Alappuzha, Kerala ,Kerala State ,
× RELATED தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும்...