×
Saravana Stores

ஆலப்புழா அருகே மீன் பிடித்தபோது குளத்தில் மூழ்கி மாணவி பலி

திருவனந்தபுரம், ஜூலை 7: கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள கரியிலக்குளங்கரை பகுதியை சேர்ந்தவர் சிவபிரசாத். இவரது மகள் லேகா (18). பிளஸ் 2 முடித்துள்ள இவர், கல்லூரியில் சேர்வதற்காக விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் லேகா தனது வீட்டுக்கு அருகே உள்ள ஒரு குளத்தின் கரையில் நின்று கொண்டு தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் வழுக்கியதால் அவர் தவறி குளத்துக்குள் விழுந்தார். அந்த நேரத்தில் யாரும் அங்கு இல்லை. நீச்சலும் தெரியாததால் லேகா தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். நீண்ட நேரமாக மகள் திரும்பாததால் அவரது தாய் சென்று பார்த்தபோது லேகாவின் உடல் குளத்தில் மிதப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தீயணைப்பு படையினருக்கும், போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று லேகாவின் உடலை மீட்டனர். பின்னர் போலீசார் லேகாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆலப்புழா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

The post ஆலப்புழா அருகே மீன் பிடித்தபோது குளத்தில் மூழ்கி மாணவி பலி appeared first on Dinakaran.

Tags : Alappuzha ,Thiruvananthapuram ,Sivaprasad ,Kariyalakkulangarai ,Alappuzha, Kerala ,Lekha ,
× RELATED கேரளாவில் வடகிழக்கு பருவமழை தீவிரம்: 5...