×

பட்டினியில் இருந்த உதவி இயக்குநர்களின் பசியை போக்கியவர் நடிகர் விஜயகாந்த்: விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் விஷால்!

சென்னை: நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயரை வைப்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு கிடையாது என மறைந்த விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் விஷால் பேட்டி அளித்துள்ளார். வாழும்போதே பலருக்கு கடவுளாக இருந்தவர் விஜயகாந்த் என நடிகர் விஷால் புகழாரம் சூட்டியுள்ளார். தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த 28ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்தனர்.

விஜயகாந்தின் உடலானது தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டு, தினசரி மலர் அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்று வருகிறது. விஜயகாந்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியாதவர்கள் தற்போது அவரது நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி செல்கின்றனர். தினமும் ஏராளமானோர் விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் இன்று நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், ஆர்யா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் பேட்டி அளித்தார் நடிகர் விஷால்; பட்டினியில் இருந்த உதவி இயக்குநர்களின் பசியை போக்கியவர் விஜயகாந்த். நடிகர், அரசியல், பொதுப்பணி என அனைத்திலும் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் விஜயகாந்த் என நடிகர் விஷால் புகழாரம் சூட்டியுள்ளார். விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பில் வருகிற 19ம் தேதி அஞ்சலி கூட்டம் நடைபெறும் என நடிகர் விஷால் அறிவித்துள்ளார். பாரத ரத்னா விருது கொடுக்கிறார்களோ இல்லையோ, பாரத தேசத்தில் உள்ள அனைவரும் மனதார அஞ்சலி செலுத்தினார்கள். வாழும் போதே கடவுளாக வாழ்ந்தவர் விஜயகாந்த். நடிகர் சங்க கட்டடத்திற்கு விஜயகாந்த் பெயர் வைக்க பரிசீலனை செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

 

The post பட்டினியில் இருந்த உதவி இயக்குநர்களின் பசியை போக்கியவர் நடிகர் விஜயகாந்த்: விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் விஷால்! appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,Vishal ,Vijayakanth Memorial ,Chennai ,Sangam ,
× RELATED விஜயகாந்த் நினைவிடத்திற்கு போலீஸ்...