×

9,10ம் வகுப்பு மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை

சேலம், ஜன.9: சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 9 மற்றும் 10ம் வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிட தமிழ்நாடு அரசு உத்தேசித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற பெற்றோரின் உச்சபட்ச ஆண்டு வருமானம் ₹2.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். தகுதியுள்ள மாணவிகளுக்கு ஆண்டுக்கு ₹4,000 கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும்.

மேலும், இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 9 மற்றும் 10ம் வகுப்பில் பயிலும் மாணவிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அல்லது அஞ்சலக வங்கியில் தமது பெயரில் வங்கிக்கணக்கு துவங்கி, அதனை தமது ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். ஆதார் எண் மற்றும் வங்கி விவரங்கள், வருமானச்சான்று, சாதிச்சான்று நகல்களுடன் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். அரசு பள்ளி தலைமையாசிரியர்கள், மாணவிகளின் விவரங்களை எமீஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 9,10ம் வகுப்பு மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை appeared first on Dinakaran.

Tags : Salem ,District ,Collector ,Karmegam ,Union Government ,
× RELATED சேலத்தில் வெயிலில் ஆஃப்பாயில் போட முயன்றவர்களிடம் போலீசார் விசாரணை..!!