×

ராமர் கோயில் சுரண்டல் தளம் கோயில்கள் அடிமை பாதை பள்ளிகள் ஒளியின் பாதை: பீகார் கல்வி அமைச்சர் பேச்சால் பரபரப்பு

ரோஹ்தாஸ்: பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையில் கூட்டணி ஆட்சி நடக்கிறது. அங்கு லாலுபிரசாத்யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில் சார்பில் கல்வி அமைச்சராக சந்திரசேகர் உள்ளார். அவர் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசும்போது,’ ராமர் கோயிலுக்கு ஒதுக்கப்பட்ட இடம் சுரண்டல் தளம். இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த சில சதிகாரர்களின் பாக்கெட்டுகளை நிரப்பும் இடம். போலி இந்துத்துவா மற்றும் போலி தேசியவாதம் குறித்து நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். ஒவ்வொருவரிலும் ராமர் வாழ்கிறார்.

ராமரைக் கண்டுபிடிக்க எங்கும் அல்லது எந்த கோயிலுக்கும் செல்ல வேண்டிய அவசியமில்லை. கோயில்கள் மன அடிமைத்தனத்திற்கான பாதை, பள்ளிகள் வாழ்க்கையில் ஒளியின் பாதை . காயம்பட்டால் எங்கே போவது? கோயிலா? மருத்துவமனையா? கல்வி வேண்டும், அதிகாரி, எம்.எல்.ஏ., எம்.பி. ஆக வேண்டும் என்றால் கோயிலுக்கு செல்வீர்களா அல்லது பள்ளிக்கு செல்வீர்களா? ‘ என்று கேள்வி எழுப்பினார். அமைச்சர் சந்திரசேகர் பேச்சால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பா.ஜ அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

The post ராமர் கோயில் சுரண்டல் தளம் கோயில்கள் அடிமை பாதை பள்ளிகள் ஒளியின் பாதை: பீகார் கல்வி அமைச்சர் பேச்சால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Bihar ,Education ,Minister ,Rohtas ,Nitish Kumar ,Chandrashekar ,Rashtriya Janata Dalam Party ,Lalu ,Prasadhyada ,Ramar Temple ,Bihar Education ,
× RELATED பீகார் மாநிலத்தில் கிரேன் மீது ஆட்டோ மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!