×

பொங்கல் பரிசு தொகுப்பு பெற திண்டுக்கல்லில் இன்று முதல் டோக்கன் விநியோகம்: கலெக்டர் பூங்கொடி தகவல்

 

திண்டுக்கல், ஜன. 8: பொங்கல் பரிசு தொகுப்பு பெற திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று முதல் டோக்கன் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி கூறியதாவது: தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் தைப்பொங்கலுக்கு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரொக்கப் பணம் ரூ.1000 அனைத்து நியாய விலைக் கடைகளிலும் வழங்க தமிழக அரசால் ஆணை வழங்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் பொங்கல் பரிசுப் பொருட்கள் பெறுவதில் புகார்கள் குறைபாடுகள் ஏதேனும் இருப்பின் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை தொலைபேசி 0451 2460097 எண்ணிற்கும், கட்டணமில்லா தொலைபேசி 1967 மற்றும் 1800 425 5901 ஆகிய எண்ணிலும், சென்னை முதன்மை செயலாளர் மற்றும் ஆணையர் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி 044-28592828 எண்ணில் வேலை நாட்களில் வேலை நேரத்தில் செயல்பட உள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவது தொடர்பான புகார்கள் ஏதேனும் இருப்பின் குடும்ப அட்டைதாரர்கள் தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன்கள் இன்று முதல் முதல் ஜன.9ம் தேதி வரை வழங்கப்பட உள்ளது. மேலும், ஜன.12ம் தேதி வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகள் செயல்படும். குடும்ப அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்களில் எவரேனும் ஒருவர் அல்லது டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் ரேஷன் கடைக்கு சென்று பொங்கல் பரிசுத் தொகுப்புகளை கூட்ட நெரிசலின்றி பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களும் அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தினத்தன்று ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப் பணம் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

The post பொங்கல் பரிசு தொகுப்பு பெற திண்டுக்கல்லில் இன்று முதல் டோக்கன் விநியோகம்: கலெக்டர் பூங்கொடி தகவல் appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Collector ,Poongodi ,Tamils ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் பூதிபுரம் ரேஷன் கடையில் கலெக்டர் ஆய்வு