×

தூத்துக்குடி தாசில்தார் அலுவலகத்தில் 2024 வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி

தூத்துக்குடி, ஜன.8: தூத்துக்குடி தாசில்தார் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட பணிகள் தொடர்பான சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்- 2024 தொடர்பான பணிகளை வாக்காளர் பட்டியல் தென்மாவட்ட பார்வையாளரும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண் இயக்குநருமான சரவணவேல்ராஜ் ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் பெயர்களை சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட பணிகள் தொடர்பான சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்- 2024 பணியானது 2023 அக்டோபர் 27 முதல் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்-2024 பணிக்கு தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களின் பார்வையாளரும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண் இயக்குநருமான சரவணவேல்ராஜ், தூத்துக்குடி தாசில்தார் அலுவலகத்தில் நேற்று வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தத்தின்போது பெறப்பட்ட படிவங்கள் 6, 7, 8 ஆகியவற்றின்மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.

மேலும் அவர் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தத்தின்போது பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது மேற்கொண்ட களவிசாரணை குறித்தும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான லட்சுமிபதி, தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரும், மாநகராட்சி ஆணையாருமான தினேஷ்குமார், டிஆர்ஓ அஜய் சீனிவாசன், தூத்துக்குடி தாசில்தார் பிரபாகரன், தேர்தல் தாசில்தார் தில்லைபாண்டி, தேர்தல் துணை தாசில்தார் சிவகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

The post தூத்துக்குடி தாசில்தார் அலுவலகத்தில் 2024 வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி appeared first on Dinakaran.

Tags : Thoothukudi Tahsildar ,Thoothukudi ,Thoothukudi tehsildar ,Tamil Nadu Housing Board ,Saravanavelraj ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடியில் மீனவரை கத்தியால் குத்தியவர் கைது