×

போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை

சென்னை: போக்குவரத்து கழக தொழிலாளர்கள் நாளை வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில் தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் இன்றும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பினர் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.

இதனிடையே போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட கோரி இன்று மீண்டும் அமைச்சர் சிவசங்கர், தொழிற்சங்க பிரதிநிதிகள் இடையே பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் 15 வது ஊதிய ஒப்பந்தம், ஓய்வூதியர்கள் அகவிலைபடி உயர்வு, பணியில் உள்ள தொழிலாளர்கள் 4மாத நிலுவைத்தொகை பேசி தீர்வுகாணவும், மேலும் மற்ற கோரிக்கைகளை பொங்கலுக்கு பின்னர் பேசி முடிவு செய்யவும் தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

The post போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Tags : Minister ,transport unions ,CHENNAI ,Confederation of Transport Unions ,transport union ,Dinakaran ,
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...