×

கீழக்கரை பகுதியில் புகையிலை விற்ற கடைகளில் ஆய்வு

கீழக்கரை, ஜன.7: ராமநாதபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயகுமார் அறிவுரைப்படி உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ், கீழக்கரை நகராட்சி துப்புரவு மேற்பணியாளர் ஆய்வாளர் பாலா, சுகாதார ஆய்வாளர்கள் சுரேந்தர், ராம்குமார் உள்ளிட்டோர் கீழக்கரை பேருந்து நிலையம் பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர். தமிழக அரசு தடை செய்த புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடையை மூடினர். கடைகளுக்கு நோட்டீஸ் கொடுத்து அபராதம் விதித்தனர். ஆய்வின்போது புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் கண்டறியப்பட்டால் முதல் முறையாக ரூ.25 ஆயிரம் அபராதம் 15 நாள் கடைகள் மூடப்படும்,
இரண்டாவது முறையாக பிடிபட்டால் ரூ.50 ஆயிரம் அபராதம் 30 நாள் கடை மூடப்படும். மூன்றாவது முறையாக பிடிபட்டால் ரூ.1 லட்சம் அபதாரம் 90 நாள் கடை மூடப்படும் என்றும் அக்கடைக்கு உணவு பாதுகாப்புத் துறை வழங்கிய உரிமம் ரத்து செய்யப்படும் என அறிவுறுத்தப்பட்டது.

The post கீழக்கரை பகுதியில் புகையிலை விற்ற கடைகளில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Lower Bank ,Keezakarai ,Ramanathapuram District ,Food Safety Officer ,Vijayakumar ,Jayaraj ,Keezakarai Municipal Sanitation ,Supervisor ,Bala ,Surender ,Ramkumar ,Dinakaran ,
× RELATED இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கல்...