×

விஏஓ.,க்கள் ஆர்ப்பாட்டம்

சேந்தமங்கலம், ஜன.7: சேந்தமங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சேந்தமங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் கூட்டமைப்பு சார்பில் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டார தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார். செயலாளர் சத்தியசீலர் முன்னிலை வகித்தார். இதில் மாநில வருவாய் நிர்வாக ஆணையாளர் டிஜிட்டல் கிராப் சர்வே பணி தொடர்பாக மேற்கொள்ளப்படும் ஊழியர்கள் விரோதப் போக்கை கண்டிப்பது, டிஜிட்டல் கிராப் சர்வே பணி செய்ய தேவையான உபகரணங்கள் மற்றும் போதுமான கால அவகாசம் வழங்க வேண்டும் குறைகளை களையாமல் டிஜிட்டல் கிராப் சர்வே பணியை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் நிர்பந்தம் செய்வதை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதில் சேந்தமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட 50க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post விஏஓ.,க்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : VAO ,Senthamangalam ,Senthamangalam taluk ,Association of Village Administrative Officers ,Tamil Nadu Village Administrative Officers Federation ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை அருகே தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முன்னாள் விஏஓ கைது..!!