×

ராகுல் யாத்திரை லோகோ வெளியீடு: பிரதமர் மீது கார்கே குற்றச்சாட்டு

புதுடெல்லி: 2024 மக்களவை தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி 2ம் கட்டமாக வரும் 14ம் தேதி கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை தொடங்க உள்ளார். மணிப்பூர் தலைநகர் இம்பாலில் தொடங்கி 66 நாட்களில் 6,713 கிமீ பயணித்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நிறைவடைய உள்ளது. இந்நிலையில் டெல்லியிலுள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரைக்கான லோகோ மற்றும் முழக்கத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தகவல் தொடர்பு பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் பொதுசெயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் நேற்று கூட்டாக வௌியிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, “ மணிப்பூரில் அசாதாரணமான, துரதிருஷ்டவசமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. எங்கு பார்த்தாலும் புகைப்படம் எடுத்து கொள்ளும் பிரதமர் மோடிக்கு மணிப்பூர் செல்ல நேரமில்லை. எதிர்க்கட்சி தலைவர்களை அச்சுறுத்த அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, புலனாய்வு அமைப்பு ஆகியவை அப்பட்டமாக தவறாக பயன்படுத்தப்படுகிறது. நாங்கள் பிரச்சினைகளை பற்றி மக்களிடம் கூறப் போகிறோம்’ என்றார்.

The post ராகுல் யாத்திரை லோகோ வெளியீடு: பிரதமர் மீது கார்கே குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Gharke ,PM ,New Delhi ,2024 Lok Sabha elections ,Congress ,Rahul Gandhi ,India Unity Nyaya Yatra ,Manipur ,Imphal… ,Rahul ,Dinakaran ,
× RELATED காங். தேர்தல் அறிக்கை குறித்து...