×

காங். தேர்தல் அறிக்கை குறித்து விளக்குவதற்காக பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு கார்கே கடிதம்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையானது செல்வத்தின் மறுபங்கீடு செய்வதையும் ஊடுருவல்காரர்களுக்கு விட்டுக்கொடுப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளதாக பிரதமர் மோடி காங்கிரசை கடுமையாக விமர்சித்து வருகின்றார். மேலும் காங்கிரஸ் பெண்களின் மாங்கல்யத்தின் மீது குறிவைத்துள்ளதாகவும் பிரதமர் பிரசாரத்தின்போது குற்றம்சாட்டி வருகின்றார். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள்.

இந்த கடிதத்தில் கார்கே கூறியிருப்பதாவது, ‘‘காங்கிரஸ் கட்சியின் நியாய பத்திரம் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளிகள் மற்றும் நாட்டில் விளிம்பு நிலையில் உள்ள அனைத்து சாதி, சமூகங்களை சேர்ந்தவர்களுக்கும் நீதி வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. சூழ்நிலைக்கேற்ப சில வார்த்தைகளை மட்டும் எடுத்துக்கொண்டு வகுப்புவாத பிளவை உருவாக்குவது உங்களது வழக்கமாகி விட்டது. எங்களது தேர்தல் அறிக்கையில் கூட குறிப்பிடப்படாத விஷயங்களை குறித்து உங்கள் ஆலோசகர்களால் உங்களுக்கு தவறான தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. எங்களது நியாய பத்திரம் குறித்து விளக்குவதற்கு உங்களை நேரில் சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும். நாட்டின் பிரதமர் என்ற முறையில் பொய்யான அறிக்கைகளை நீங்கள் வெளியிட வேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post காங். தேர்தல் அறிக்கை குறித்து விளக்குவதற்காக பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு கார்கே கடிதம் appeared first on Dinakaran.

Tags : Kong ,Gharke ,PM Modi ,New Delhi ,Modi ,Congress ,Karke ,
× RELATED ஜெயக்குமார் மரணத்தில் நிறைய...