×

வரும் மக்களவைத் தேர்தலில் தெலங்கானாவில் சோனியா போட்டியா?

திருமலை: வரும் மக்களவைத் தேர்தலில் சோனியா காந்தி தெலங்கானாவில் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தெலங்கானாவில் சமீபத்தில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய நிலையில், தற்போது வரும் மக்களவைத் தேர்தலில் தெலங்கானாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி போட்டியிட வேண்டும் என மாநில காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கட்சியின் தலைமைக்கு அனுப்பினர். இதற்கு சோனியா காந்தியும் சம்மதம் தெரிவித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

எனவே சோனியா காந்தி தெலங்கானாவில் இருந்து மக்களவை தேர்தலில் போட்டியிடுவார், ஆனால் எந்த தொகுதி என முடிவு செய்யவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே சமயம் கம்மம் தொகுதியில் அவர் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வரும் மக்களவைத் தேர்தலில் தெலங்கானாவில் சோனியா போட்டியா? appeared first on Dinakaran.

Tags : Sonia ,Telangana ,Lok Sabha ,Tirumala ,Sonia Gandhi ,Congress ,
× RELATED 2024 லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் புது...