×

நடிகருடன் திருமணம் எப்போது?: நடிகை ரகுல் பிரீத் பதில்

மும்பை: பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான ஜாக்கி பக்னானி என்ப வரை ரகசியமாக காதலித்து வந்த நடிகை ரகுல் பிரீத், தனது 31வது பிறந்தநாளில், இவர்தான் தன் காதலன் என்று அவரை சமூக வலைத்தளங்களின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார். இதையடுத்து வரும் ஜனவரி மாதம் ரகுல் பிரீத், ஜாக்கி பக்னானி திருமணம் நடைபெறும் என்று தகவல்கள் வெளியானது. இதுகுறித்து ரகுல் பிரீத் கூறியதாவது: நான் சினிமாவில் நடித்தாலும், என் சொந்த வாழ்க்கை குறித்து பொதுவெளியில் அதிகமாகப் பகிர்ந்துகொள்ள விரும்ப மாட்டேன். அப்படி இருந்தும் என் காதலன் ஜாக்கி பக்னானி பற்றி சமூக வலைத்தளங்கள் மூலம் வெளிப்படையாகச் சொன்னேன். காரணம், எங்களுடைய காதல் என்பது மிகவும் அற்புதமான விஷயமாக எனக்கு தெரிந்தது. எனவே, என் திருமணத்துக்கு இப்போது அவசரம் இல்லை. அது நடக்கும்போது கண்டிப்பாக அனைவருக்கும் சொல்கிறேன்….

The post நடிகருடன் திருமணம் எப்போது?: நடிகை ரகுல் பிரீத் பதில் appeared first on Dinakaran.

Tags : Rahul Preet ,Mumbai ,Rakul Preet ,Bollywood ,Jackie Bagnani ,
× RELATED கடும் எதிர்ப்பை மீறி அமலுக்கு வந்தது...