×

TNPSC தலைவர், உறுப்பினர்களை ஊழல் கண்காணிப்பு ஆணையம் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை வரம்புக்குள் கொண்டு வந்து பிறப்பிக்கப்பட்ட திருத்த விதிகள் செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சென்னை: TNPSC தலைவர், உறுப்பினர்களை ஊழல் கண்காணிப்பு ஆணையம் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை வரம்புக்குள் கொண்டு வந்து பிறப்பிக்கப்பட்ட திருத்த விதிகள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. ஊழல் தடுப்பு சட்ட பிரிவின்படி தேர்வாணைய தலைவர், உறுப்பினர்கள் அரசு ஊழியர்கள் என்பதால் ,தேர்வாணைய விதிகளில் திருத்தம் தன்னிச்சையானது என கூற முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாணைய விதிகளில் திருத்தம் கொண்டு வர ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. உறுப்பினர்களின் உரிமை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

The post TNPSC தலைவர், உறுப்பினர்களை ஊழல் கண்காணிப்பு ஆணையம் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை வரம்புக்குள் கொண்டு வந்து பிறப்பிக்கப்பட்ட திருத்த விதிகள் செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : TNPSC ,Corruption Vigilance Commission ,Anti-Bribery Department ,Madras High Court ,CHENNAI ,Selection Commission ,Dinakaran ,
× RELATED மதிப்பெண், சீனியாரிட்டி முறையில் பதவி...