×

பிரதமர் செய்தியாளர்களை சந்தித்து 10 ஆண்டு ஆகிறது: மன்மோகன்சிங்கின் தகவல் தொடர்பு ஆலோசகர் விமர்சனம்

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் ஆலோசகரும், பத்திரிகையாளருமான பங்கஜ் பச்சோரி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: கடைசியாக 2014 ஜன3ம் தேதி இந்திய பிரதமரின் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் 100க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் முன்னிலையில் 62 திட்டமிடாத கேள்விகளுக்கு பதில் அளித்தார். இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை காங்கிரஸ் தலைவர்கள் மறு டிவிட் செய்து இதுவரை பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தாத பிரதமர் மோடியை விமர்சனம் செய்துள்ளனர். மூத்த காங்கிரஸ் தலைவர் மணிஷ்திவாரி தனது டிவிட் பதிவில்,’முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 10 ஆண்டு காலத்தில் 117 முறை பத்திரிகையாளர்களுடன் உரையாடினார். 2014 முதல் 2024ம் ஆண்டு வரை பிரதமர் மோடி எத்தனை முறை பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியுள்ளார்?’ என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

The post பிரதமர் செய்தியாளர்களை சந்தித்து 10 ஆண்டு ஆகிறது: மன்மோகன்சிங்கின் தகவல் தொடர்பு ஆலோசகர் விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Manmogansing ,New Delhi ,Former ,Pankaj Bachori ,Indian ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு