- ஓம்னி பஸ் ஸ்டாண்ட்
- முட்டிச்சூர்... பேருந்துகள்
- கிளம்பாகம் சர்விஸ் ரோட்
- அமைச்சர்
- சேகர்பாபு
- சென்னை
- கிளம்பக்கம் சர்வீஸ் ரோட்
- சேகர்பாபு
- கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
- முடிச்சூர்
- தின மலர்
சென்னை : கிளாம்பாக்கம் சர்வீஸ் சாலையில் பள்ளி நேரங்களில் பேருந்துகள் இயக்கப்படாது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இன்று காலை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கிளாம்பாக்கம் சர்வீஸ் சாலையில் இனி பேருந்துகள் இயக்கப்படாது. பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படாதவாறு பேருந்துகள் இயக்கப்படும்.ஆதிதிராவிடர் பள்ளியை வேறு இடத்திற்கு மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு இடையூறாக உள்ள சுவரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
புதிய ஆம்னி பேருந்து நிலையம் முடிச்சூரில் கட்டப்படுகிறது. கிளாம்பாக்கத்தில் பயணிகளின் பாதுகாப்பிற்காக காவல் நிலையம் பொங்கலுக்குள் பயன்பாட்டிற்கு வரும்.ஓராண்டுக்குள் கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகள் நிறைவடையும். பொது மக்கள் சாலையை கடக்க நடை மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வாரந்தோறும் 2 நாட்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். அதிமுக ஆட்சியில் கிளாம்பாக்கத்தில் 30% பணிகள் மட்டுமே நிறைவடைந்தன. மத்திய மந்திரி எல்.முருகன் பேருந்து நிலையைத்தை சுற்றிப் பார்த்து குறைகளை சொல்லலாம். இவ்வாறு அவர் கூறினார்.
The post முடிச்சூரில் ஆம்னி பேருந்து நிலையம்….கிளாம்பாக்கம் சர்வீஸ் சாலையில் பேருந்துகள் இயக்கப்படாது : அமைச்சர் சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.