×

‘லியோ’ படத்தில் வன்முறை காட்சிகள் இருந்ததாக கூறி இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு எதிராக மதுரைக்கிளையில் வழக்கு!

மதுரை: லியோ படத்தில் வன்முறை காட்சிகள் இருந்ததாக கூறி இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. வன்முறை காட்சிகள் நிறைந்த லியோ படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜை முறையாக உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘லியோ’. இந்த படம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியானது. இந்நிலையில் வன்முறை காட்சிகள் நிறைந்த லியோ படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தற்போது உயர்நீதிமன்ற கிளையில் ராஜமுருகன் என்பவர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அவர் தாக்கல் செய்த மனுவில்; ‘லியோ’ திரைப்படம் முழுவதும் வன்முறை சம்பவங்களாகவே உள்ளன. வெடி மறுத்து தயாரித்தல், பயங்கர ஆயுதங்களை பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வன்முறை தொடர்பான காட்சிகள் படத்தில் உள்ளது. இந்த படத்தை பார்க்கும் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களின் மனநிலை மிகவும் பாதிப்பிற்குள்ளாகும்.

எனவே ‘லியோ’ திரைப்படத்தை அனைத்து சமூக ஊடகங்களிலிருந்து வெளியிடுவதை தடை செய்ய வேண்டும். தொடர்ந்து வன்முறை சம்பவங்களை கொண்டு திரைப்படம் இயக்கக்கூடிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் அவரை உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை. எனவே இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

The post ‘லியோ’ படத்தில் வன்முறை காட்சிகள் இருந்ததாக கூறி இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு எதிராக மதுரைக்கிளையில் வழக்கு! appeared first on Dinakaran.

Tags : Lokesh Kanakaraj ,Madurai Kanyaraj ,Madurai ,Lokesh Kanagaraj ,High Court ,Lokesh Kanakarajai ,Madurai Kangaraj ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை