×

கொள்ளிடம் அருகே சேத்திருப்பு நடுநிலைப்பள்ளியில் ஆங்கில இலக்கிய மன்ற விழா

கொள்ளிடம்,ஜன.3: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே சேத்திருப்பு நடுநிலைப்பள்ளியில் ஆங்கில இலக்கிய மன்ற விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் பாலு தலைமை வகித்தார். ஆசிரியர் சந்திரன் வரவேற்றார். ஊராட்சி மன்ற தலைவர் சாந்தினிரமேஷ் முன்னிலை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஆங்கில பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள் கணேசன், சுந்தரி, தன்னார்வலர்கள் சுஜிதா, விஷாலி, சத்துணவு அமைப்பாளர் சத்யா மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

The post கொள்ளிடம் அருகே சேத்திருப்பு நடுநிலைப்பள்ளியில் ஆங்கில இலக்கிய மன்ற விழா appeared first on Dinakaran.

Tags : English Literary Forum ,Chettiru ,Middle ,School ,Kollidam ,English Literature ,Sethiru ,Middle School ,Mayiladuthurai district ,Headmaster ,Balu ,Teacher ,Chandran ,Panchayat ,Council ,Santiniramesh ,District Education Officer ,English Literary Forum Ceremony ,Chettirupu Middle ,Dinakaran ,
× RELATED ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட...