×

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா பா.ஜ அவசர ஆலோசனை

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயில் ஜன.22ம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்த திறப்பு விழா குறித்து பா.ஜ நேற்று டெல்லியில் அவசர ஆலோசனை நடத்தியது. பா.ஜ தேசிய தலைவர் ஜேபி நட்டா தலைமையில் நடைபெற்ற பாஜ உயர்மட்ட தலைவர்கள் கூட்டத்தில் அயோத்தி திறப்பு விழா மற்றும் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. இந்த கூட்டத்தில் பா.ஜ பொதுச்செயலாளர் சுனில் பன்சால், ஒன்றிய அமைச்சர்கள் பூபேந்தர் யாதவ், அஷ்வினி வைஷ்ணவ், மன்சுக் மாண்டவியா, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

The post அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா பா.ஜ அவசர ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Ayodhya Ram ,temple ,BJP ,New Delhi ,Ayodhya Ram Temple ,Delhi ,Ayodhya ,Ram ,Dinakaran ,National President ,JP Natta ,
× RELATED ராம நவமி நாளில் அயோத்தி ராமரின்...