×

மேட்டூர் அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு

மேட்டூர்: ஒகேனக்கல் காவிரியில் தொடர்ந்து 1,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 1200 கனஅடியாக சரிந்தது. இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 600 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 807 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை முதல் விநாடிக்கு 600 கனஅடியாக உயர்த்தப்பட்டது. நேற்று முன்தினம் 71.23 அடியாக இருந்து நீர்மட்டம், நேற்று 71.27 அடியாக உயர்ந்தது.

The post மேட்டூர் அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Mettur Dam ,Mettur ,Okanagan Cauvery ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணையை திறக்க வாய்ப்பில்லை...