×

கூடலூர் அருகே 18ம் கால்வாயில் கரை உடைப்பால் தண்ணீர் நிறுத்தம்

கூடலூர், ஜன. 1:உத்தமபாளையம், போடி தாலுகாவில் உள்ள கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம், டி.மீனாட்சிபுரம், சிந்தலைச்சேரி, சங்கராபுரம், கோடாங்கி பட்டி ஆகிய பகுதிகள் நீர்ப் பாசன வசதி பெறும் வகையிலும், உத்தமபாளையம் தாலுகாவில் உள்ள 29 கண்மாய்கள், போடி தாலுகாவில் உள்ள 15 கண்மாய்கள் என மொத்தம் 44 கண்மாய்களில் தண்ணீர் தேக்கப்பட்டு 4,614 ஏக்கர் நிலம் பாசனம் வசதி பெறும் வகையில் 18ம் கால்வாய் அமைக்கப்பட்டது. கூடலூரை அடுத்து லோயர்கேம்ப்பில் முல்லைப் பெரியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு 18ம் கால்வாய்க்கு தண்ணீர் பிரித்து விடப்படுகிறது.

40.8 கிலோமீட்டர் நீளம் செல்லும் இக்கால்வாயின் குறுக்கே 116 இடங்களில் பாலம் அமைக்கப்பட்டு இருக்கிறது. ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் இந்த கால்வாயில் தண்ணீர் திறந்து விடுவது வழக்கமாகும். இந்த ஆண்டு கடந்த டிச.19ம் தேதி ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி 18ம் கால்வாயில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 98 கன அடி வீதம் 30 நாட்களுக்கு தண்ணீரை திறந்து வைத்தார்.

இந்நிலையில் 18ம் கால்வாய் தலை மதகு பகுதியான கழுதை மேடு, சரித் திரவு, பெருமாள் கோவில் புலம், தொட்டி பாலம் ஆகிய பகுதிகளில் கால்வாயின் கரைகள் சீரமைக்கப்படாததால் சேதமடைந்து தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதை அடுத்து விவசாயிகள் மணல் மூட்டைகளை அடிக்கு கால்வாய் கறைகளை ஓரளவு சரிப்படுத்தினர். இருப்பினும் தண்ணீர் கசிவு அதிகமாக உள்ளதால் நேற்று முதல் 18ம் கால்வாய் விவசாயத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.

The post கூடலூர் அருகே 18ம் கால்வாயில் கரை உடைப்பால் தண்ணீர் நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Kudalur ,Cuddalore ,Gombai ,Farmanpuram ,Devaram ,D. Meenachipuram ,Chinthaliccherry ,Shankarapuram ,Kodangi Patti ,Uttampalayam ,Bodi taluk ,Uttampaliyam taluk ,Dinakaran ,
× RELATED கூடலூரில் உள்ள மீன்கடைகளில் கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்..!!