×

ஜாதிப் பெயரைக் குறிப்பிட்டு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறைக்கு வலுக்கும் கண்டனம்: விசாரணையை தொடங்கிய போலீசார்

சென்னை: இந்நிலையில் ஜாதிப் பெயரை குறிப்பிட்டு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்துள்ள நிலையில், போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பட்டியலினத்தைச் சேர்ந்த சகோதரர்களான கண்ணையன், கிருஷ்ணன் ஆகிய 2 விவசாயிகளுக்கு ஜாதிப் பெயரை குறிப்பிட்டு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறைக்கு கண்டனம் வலுத்து வருகிறது.

காரணத்தையே குறிப்பிடாமல், ஜூலை 5ம் தேதி இருவரும் சென்னைக்கு வர வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி ஆதார், வங்கிக் கணக்கு புத்தகத்துடன் சென்னை சென்றுள்ளனர் அப்பாவி விவசாயிகள்.

பாஜக நிர்வாகி உதவியுடன் தங்களது 6.5 ஏக்கர் நிலத்தை அபகரிக்க சிலர் முயற்சிப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். வங்கியில் ரூ.500 மட்டுமே வைத்திருந்தவர்களிடம் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபி-யிடம் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் ஜாதிப் பெயரை குறிப்பிட்டு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்துள்ள நிலையில், போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். எழுதப் படிக்கத் தெரியாத வயதான விவசாயிகள் இருவரையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மிரட்டி துன்புறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

The post ஜாதிப் பெயரைக் குறிப்பிட்டு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறைக்கு வலுக்கும் கண்டனம்: விசாரணையை தொடங்கிய போலீசார் appeared first on Dinakaran.

Tags : Samman ,Jadi ,Chennai ,Kannayan ,Krishnan ,Atur, Salem district ,Dinakaran ,
× RELATED நயினார் நாகேந்திரன் ஓட்டல் ஊழியரிடம்...