×

சர்வதேச சிலம்ப போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவியருக்கு சிறப்பு பயிற்சி முகாம்

 

கோவை, டிச.31: இலங்கையில் சர்வதேச அளவிலான சிலம்ப போட்டி வரும் 2024ம் ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ளது. இந்திய அணி சார்பாக கோவை மாவட்டத்தில் இருந்து 6 அரசு பள்ளி மாணவர்கள் உள்பட மொத்தம் 26 பேர் இந்த சர்வதேச அளவிலான சிலம்ப போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். இவர்களுடன் சேர்த்து மொத்தம் 100 பேருக்கு முல்லை தற்காப்பு கலை மற்றும் விளையாட்டு கழகத்தின் பயிற்சியாளர் பிரகாஷ்ராஜ் தலைமையில் மூன்றாவது மாநில அளவிலான சிறப்பு சிலம்ப பயிற்சி முகாம் கோவை குரும்பபாளையத்தில் நடைபெற்றது. முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு ஒற்றைக்கம்பு, ஒற்றை வாள் வீச்சு, இரட்டை வாள் வீச்சு, வேல் கம்பு போன்ற பயிற்சிகளை எடுத்துக் கொண்டனர். இதில் அனைத்து மாணவ, மாணவிகளுக்கு சிலம்பப் போட்டியின் விதிமுறைகள் நுணுக்கங்கள் ஆகியவையும் கற்றுத்தரப்பட்டு முகாமின் முடிவில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

The post சர்வதேச சிலம்ப போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவியருக்கு சிறப்பு பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Tags : International Chilamba Competition ,Coimbatore ,Sri Lanka ,International Silamba Competition ,
× RELATED நாகை – இலங்கை இடையே மே 19-ல் கப்பல் போக்குவரத்து தொடக்கம்