×

நம்மாழ்வாரின் வழியில் இயற்கை விவசாயத்தை நோக்கி பயணிப்போம் : தினகரன் ட்வீட்

சென்னை : அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், நாடெங்கும் உரம், ஊட்டச்சத்து, மருந்து என பயிரோடு சேர்த்து மண்ணையும் மலடாக்கிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் உழவர் பெருமக்களை சந்தித்து இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களின் நினைவு தினம் இன்று. நமது பாரம்பரிய உழவுமுறையான பயிர்சுழற்சி உழவு மூலம் இயல்பாகவே மண்ணில் நைட்ரஜன் சத்து அதிகரிப்பதை நிரூபித்து காட்டிய ஐயா நம்மாழ்வாரின் வழியில் நாம் அனைவரும் இயற்கை விவசாயத்தை நோக்கிய பாதையில் பயணிக்க இந்நாளில் உறுதியேற்போம்.என்று குறிப்பிட்டுள்ளார்.

The post நம்மாழ்வாரின் வழியில் இயற்கை விவசாயத்தை நோக்கி பயணிப்போம் : தினகரன் ட்வீட் appeared first on Dinakaran.

Tags : Nammalwar ,Dhinakaran ,Chennai ,General Secretary ,Amma Makkal Munnetra Kazhagam ,TTV ,Dinakaran ,
× RELATED கோடை வெப்பம்: குடிநீர், நீர்மோர்...