×

20 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவிகள் சந்திப்பு

சிவகங்கை, டிச.30: சிவகங்கை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவிகளின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கவிதா வரவேற்றார். தலைமை ஆசிரியை சிவமணி தலைமை வகித்து சிறப்புரை ஆற்றினார். கணிதப் பட்டதாரி ஆசிரியை செந்தில் வடிவு வாழ்த்தி பேசினார். பின்னர் ஓய்வு பெற்ற மற்றும் நல்லாசிரியர் விருது பெற்ற வரலாற்று ஆசிரியை பிளாரன்ஸ் லில்லி கிருஸ்டி ஏற்புரை வழங்கினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் 2003ல் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த கலைபிரிவு மாணவிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 20 ஆண்டுகளுக்கு பிறகு சந்திந்த மாணவிகள் ஒவ்வொருவரும் தங்களை பற்றிய அறிமுகம் செய்து கொண்டனர். பலவிதமான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து முன்னாள் மாணவிகள் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியினை காயத்ரி, சத்யா, தீபா மற்றும் முன்னாள் மாணவிகள் ஏற்பாடு செய்திருந்தனர். வாஹினி நன்றி கூறினார்.

The post 20 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவிகள் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Sivagangai Government Girls Higher Secondary School ,Kavitha ,Headmistress ,Sivamani ,Senthil Vadivu ,Dinakaran ,
× RELATED சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி...