×

தூத்துக்குடியில் கண்மாயில் மூழ்கிபள்ளி மாணவன் சாவு

தூத்துக்குடி, டிச. 30: தூத்துக்குடி அருகே உள்ள தெற்கு சிலுக்கன்பட்டியைச் சேர்ந்த ஜெயமுருகன் மகன் முகேஷ் (14), இப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் வடக்கு சிலுக்கன்பட்டி பகுதியில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்ற முகேஷ், குளத்து நீரில் மூழ்கி மூச்சுத்திணறி உயிரிழந்தான். தகவலறிந்த போலீசார், மாணவனின் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

The post தூத்துக்குடியில் கண்மாயில் மூழ்கிபள்ளி மாணவன் சாவு appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Thoothukudi ,Jayamurugan ,Mukesh ,South Chilukanpatti ,north Chilukanpatti ,
× RELATED தூத்துக்குடியில் ஏ.டி.எம். மையத்தில் இளைஞர் ஒருவர் கொள்ளை முயற்சி..!!