×

மீன் வியாபாரியின் கதவை தட்டிய அதிர்ஷ்டம் ரூ.10 அட்வான்ஸ் கொடுத்து வாங்கிய லாட்டரிக்கு ரூ.1 கோடி பரிசு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பாலக்காடு அருகே ரூ.10 அட்வான்ஸ் கொடுத்து வாங்கிய லாட்டரி டிக்கெட்டுக்கு ரூ.1 கோடி முதல் பரிசு கிடைத்தது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் நென்மாரா அருகே திருவழியாடு பகுதியை சேர்ந்தவர் மஜீத். பைக்கில் மீன் வியாபாரம் செய்து வருகிறார். தினமும் காலையில் வியாபாரத்திற்கு புறப்படும்போது அங்குள்ள ஒரு கடையில் ரூ.10 அட்வான்ஸ் பணம் கொடுத்து லாட்டரி டிக்கெட் வாங்குவது அவரது வழக்கம்.

வியாபாரத்தை முடித்து திரும்பும்போது மீதித் தொகையை அவர் கொடுத்து விடுவார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு மஜீத் மீன் வியாபாரத்திற்கு செல்லும்போது வழக்கம்போல ரூ.10 அட்வான்ஸ் கொடுத்து 5 பிப்டி பிப்டி லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கினார். ஒரு டிக்கெட்டின் விலை ரூ.250 ஆகும். வியாபாரத்தை முடித்த பின்னர் பாக்கித் தொகை ரூ.240ஐ அவர் கடைக்காரரிடம் கொடுத்து விட்டார்.

இந்த நிலையில் மஜீத் வாங்கிய எப் எக்ஸ் 492775 என்ற டிக்கெட்டுக்கு முதல் பரிசு ரூ.1 கோடி விழுந்தது. அதே எண்ணுடைய வேறு வேறு தொடரில் உள்ள 4 டிக்கெட்டுகளுக்கு ஆறுதல் பரிசு தலா ரூ.8 ஆயிரமும் கிடைத்தது. கடந்த 20 வருடங்களாக லாட்டரி வாங்கும் தனக்கு பலமுறை சிறிய, சிறிய பரிசு கிடைத்திருந்த போதிலும் பெரும் தொகை பரிசாக கிடைப்பது இதுவே முதல் முறை என்று மஜீத் கூறினார்.

The post மீன் வியாபாரியின் கதவை தட்டிய அதிர்ஷ்டம் ரூ.10 அட்வான்ஸ் கொடுத்து வாங்கிய லாட்டரிக்கு ரூ.1 கோடி பரிசு appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Palakkad ,Kerala ,Tiruvayadu ,Nenmara ,Palakkad district ,Dinakaran ,
× RELATED சரக்கு போக்குவரத்து, ஆம்புலன்ஸ்...