×

அறந்தாங்கி அருகே உலக நன்மை வேண்டி குத்துவிளக்கு பூஜை

அறந்தாங்கி, டிச.29: அறந்தாங்கி அருகே வேள்வரை கிராமத்தில் உலக நன்மை வேண்டி பெண்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் திருவிளக்கு பூஜை வழிபாடு நடத்தினர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வேள்வரை கிராமத்தில் விவசாயம் செழிக்க வேண்டி நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜை செய்து வழிபாடு செய்தனர். ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேள்வரை கிராமத்தில் 15ஆம் ஆண்டாக ஐயப்பன் பூஜை நடைபெற்றது.

இதில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் விளக்கு ஏற்றி பூஜை செய்தனர். பூஜையில் விவசாயம் செழிக்க வேண்டியும், மழை வர வேண்டியும், திருமணத்தடை நீங்க வேண்டியும் குழந்தை பாக்கியம் வேண்டியும் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி பூஜை செய்தனர். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

The post அறந்தாங்கி அருகே உலக நன்மை வேண்டி குத்துவிளக்கு பூஜை appeared first on Dinakaran.

Tags : Kuthuvilaku Pooja ,Aranthangi ,Thiruvilakku ,Puja ,Velwari ,Pudukottai district ,Aranthangi, ,Velwari village ,Thiruvilakku Puja ,
× RELATED அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக்...