×

கேரள ஆளுநர் டிரைவர் தற்கொலை

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் ஆளுநராக இருப்பவர் ஆரிப் முகம்மது கான். இவரது கார் டிரைவர் தேஜஸ் (48). இவரது சொந்த ஊர் ஆலப்புழா அருகே சேர்த்தலா. திருவனந்தபுரத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் உள்ள குடியிருப்பில் தேஜஸ் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை தனது குடியிருப்பில் தேஜஸ் தூக்குப்போட்டு இறந்த நிலையில் காணப்பட்டார். இது பற்றி ஆளுநர் மாளிகை நிர்வாகிகள் மியூசியம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்….

The post கேரள ஆளுநர் டிரைவர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,Arip Mohammad Khan ,Governor ,State ,Tejas ,
× RELATED ஏழைகளுக்கு இடத்தை வழங்கினால் கடவுளே...