×

மெல்போர்ன் டெஸ்ட் தொடர்ந்து ஆஸி. முன்னிலை

மெல்போர்ன்: ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் இடையிலான 2வது டெஸ்ட் மெல்போர்ன் நகரில் நடக்கிறது. அங்கு பெய்த மழை காரணமாக 3வது நாளான நேற்றும் ஆட்டம் தாமதமாக தொடங்கியது. ஆஸி முதல் இன்னிங்சில் 318ரன் குவித்திருந்தது. பாக் 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 6விக்கெட்களை இழந்து 55ஓவரில் 194ரன் மட்டுமே எடுத்திருந்தது. இந்நிலையில் நேற்று களத்தில் இருந்த ரிஸ்வான் 29, ஜமால் 2 ரன்னுடன் 3வது நாளான முதல் இன்னிங்சை தொடர்ந்தனர். அரை சதத்தை நெருங்கிய ரிஸ்வான் 42ரன்னிலும், அடுத்த வந்த அப்ரிடி 21 ரன்னிலும் வெளியேறினர். அடுத்த சில ஓவர்களில் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. பாக் 73.5ஓவரில் 264ரன் எடுத்தது. ஜமால் 33ரன்னுடன் களத்தில் இருந்தர். ஆஸி தரப்பில் கேப்டன் பேட் கம்மின்ஸ் 5, நாதன் லயன் 4விக்கெட் அள்ளினர்.

ஆஸி 54ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கியது. பாக் அதிரடியில் கவாஜா 0, வார்னர் 6, லபுஷேன் 4, டிராவிஸ் 0 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். அப்போது ஆஸி 5.2ஓவரில் 4விக்கெட் இழப்புக்கு 16ரன் எடுத்திருந்தது. அதன் பிறகு இணை சேர்ந்த ஸ்மித், மார்ஷ் இணை பொறுப்பாக விளையாட ஸ்கோர் உயர்ந்தது. இந்த இணை 5வது விக்கெட்டுக்கு 153ரன் குவித்தது. சதத்தை நெருங்கிய மார்ஷ் 96ரன்னில் ஆட்டமிழந்தார். அரை சதம் அடித்த ஸ்மித் 50ரன்னில் ஆட்டமிழந்ததும் 3வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அப்போது ஆஸி 2வது இன்னிங்சில் 6 விக்கெட்களை இழந்து 62.3ஓவரில் 187ரன் எடுத்துள்ளது. அலெக்ஸ் கேரி 16 ரன்னுடன் களத்தில் உள்ளார். பாக். வீரர்கள் அப்ரிடி, மிர் ஹம்சா தலா 3 வீரர்களை வீழ்த்தினர். ஆஸி அணி 241ரன் முன்னிலையுடன் 4வது நாளான இன்று 2வது இன்னிங்சை தொடர உள்ளது.

The post மெல்போர்ன் டெஸ்ட் தொடர்ந்து ஆஸி. முன்னிலை appeared first on Dinakaran.

Tags : Melbourne Test ,Aussies ,Melbourne ,Australia ,Pakistan ,Pak ,Dinakaran ,
× RELATED ஆஸ்திரேலியா – இந்தியா டெஸ்ட் தொடர் அட்டவணை