×

இம்ரான் வழக்கு விசாரணை ஜன.11 வரை நிறுத்தி வைப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தூதரகம் கடந்தாண்டு மார்ச் மாதம் அனுப்பிய தூதரக ஆவணங்களை கசிய விட்ட வழக்கில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளியும் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஷா மக்மூத் குரேஷி மீது பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பு வழக்கு பதிந்தது. இந்த வழக்கில் இருவருக்கும் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் ஏன் ரகசிய விசாரணை நடத்தப்பட்டது என்று கேள்வி எழுப்பி வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 11ம் தேதி வரை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். இது குறித்து புலனாய்வு அமைப்புக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

The post இம்ரான் வழக்கு விசாரணை ஜன.11 வரை நிறுத்தி வைப்பு appeared first on Dinakaran.

Tags : Imran ,Islamabad ,Pakistan ,Imran Khan ,foreign minister ,Shah Makmood Qureshi ,
× RELATED கலவரத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது: இம்ரான் கான் அறிவிப்பு