×

கலவரத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது: இம்ரான் கான் அறிவிப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் தலைவர் இம்ரான் கான் பிரதமர் பதவி வகித்த போது பல ஊழல்களில் ஈடுபட்டதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு மே 9ம் தேதி இம்ரான் கான் கைது செய்யப்பட்டபோது தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். ராவல்பிண்டியில் உள்ள ராணுவ அலுவலகம்,மியான்வலி விமான படை தளம், பைசலாபாத் ஐஎஸ்ஐ கட்டிடத்திற்குள் புகுந்து இம்ரானின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த வன்முறை தொடர்பாக அரசாங்க ரகசிய சட்டத்தின் கீழ் இம்ரான் மற்றும் அவரது கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன் ஐஎஸ்ஐயின் தலைமை செய்தி தொடர்பாளர் பேட்டியளிக்கையில்,‘‘ மே 9ம் தேதி வன்முறைக்கு காரணமானவர்கள் தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டால்தான் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து பரிசீலனை செய்யப்படும்’’ என்றார். அல் காதிர் அறக்கட்டளை வழக்கு விசாரணை தொடர்பாக இம்ரான் கானை அடியாலா சிறையில் போலீசார் நேற்று ஆஜர்படுத்தினர். அதன் பின்னர் வெளியே வந்த இம்ரான் பேட்டியளித்தார். அப்போது கலவரத்துக்கு மன்னிப்பு கேட்பீர்களா என்று கேட்டபோது,‘‘ கலவரம் நடந்த போது போலீஸ் காவலில் இருந்தேன். அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இதனால் மன்னிப்பு கேட்க முடியாது’’ என்றார்.

The post கலவரத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது: இம்ரான் கான் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Imran ,ISLAMABAD ,Pakistan ,Tehreek ,-Insaaf chief ,Imran Khan ,Dinakaran ,
× RELATED இம்ரான் கான் மீது புதிய வழக்கு