×

அறிமுக வீரர் படுகாயம்

இலங்கை அணியுடன் காலேவில் நேற்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில், இடது கை பேட்ஸ்மேன் ஜெரிமி சோலோஸனோ (26 வயது) அறிமுகமானார். சேஸ் வீசிய 24வது ஓவரின் 4வது பந்தை கருணரத்னே ஓங்கி அடிக்க ஷார்ட் லெக் திசையில் நின்றிருந்த சோலோஸனோவில் ஹெல்மெட்டில் பந்து பலமாகத் தாக்கியது. இதனால் நிலைகுலைந்த அவர் களத்திலேயே சுருண்டு விழுந்தார். ஸ்கேன் பரிசோதனையில் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என்பது தெரியவந்தாலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரது உடல்நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்….

The post அறிமுக வீரர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : West Indies ,Calle ,Sri Lanka ,Jeremie ,Introductory ,Camp ,Dinakaran ,
× RELATED வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி இலங்கையில்...