×

தமிழ்த் திரையுலகில் ரசிகர்களின் அன்புக்குரியவராக திகழ்ந்தவர் விஜயகாந்த்: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் இரங்கல்

சென்னை: தமிழ்த் திரையுலகில் ரசிகர்களின் அன்புக்குரியவராக திகழ்ந்தவர் விஜயகாந்த் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 26ம் தேதி நேற்று இரவு 9 மணிக்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், நடிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்த் திரையுலகில் ரசிகர்களின் அன்புக்குரியவராக திகழ்ந்தவர் விஜயகாந்த்: டி.கே.சிவகுமார் இரங்கல்

தமிழ்த் திரையுலகில் ரசிகர்களின் அன்புக்குரியவராக திகழ்ந்தவர் விஜயகாந்த் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் இரங்கல் தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்தின் ஆன்மா சாந்தி அடையட்டும்.

மனத்தால் செழித்த மாண்பாளர் விஜயகாந்த்: ஆளூர் ஷா நவாஸ்

மனத்தால் செழித்த மாண்பாளர், அனைத்து மக்களின் அன்பாளர் விஜயகாந்த் என விசிக எம்.எல்.ஏ. ஆளூர் ஷா நவாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். கொடுத்துச் சிவந்த பண்பாளர், கள்ளம் கபடம் இல்லா குணாளர், கலை உலகின் ஆற்றலாளர். நாடி வந்தோருக்கு ஓடி உதவியவர், நிலைத்த புகழுக்கு உரியவர் விஜயகாந்த்.

The post தமிழ்த் திரையுலகில் ரசிகர்களின் அன்புக்குரியவராக திகழ்ந்தவர் விஜயகாந்த்: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,Karnataka ,Deputy Chief Minister ,TK Shivakumar ,Chennai ,DK Sivakumar ,DMK ,Myatt Hospital ,D.K.Sivakumar ,
× RELATED விஜயகாந்த் நினைவிடத்திற்கு போலீஸ்...