×

நீதிமன்றத்தில் ஆஜராகாத வாலிபர் கைது

நெல்லை, டிச. 28: நாங்குநேரி பகுதியைச் சேர்ந்தவர் இந்திரன் என்ற இசக்கிமுத்து (35). கடந்த 2010ம் ஆண்டு பெண்ணை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்த வழக்கில் இவரை நாங்குநேரி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு நாங்குநேரி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் வழக்கு விசாரணைக்கு நாங்குநேரி நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 3 மாதமாக தலைமறைவாக இருந்து வந்தார். இதனையறிந்த நீதிமன்றம் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு போலீசாருக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிந்து இந்திரன் என்ற இசக்கிமுத்துவை கைது செய்து நாங்குநேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

The post நீதிமன்றத்தில் ஆஜராகாத வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Nellie ,Indran ,Ishakhimuthu ,Nanguneri ,Dinakaran ,
× RELATED 7, 8ம்தேதி நடைபெற இருந்த உதவி...