×

சென்னை எண்ணூர் அருகே பெரியகுப்பம் பகுதியில் தொழிற்சாலையில் இருந்து வாயுக் கசிவு

எண்ணூர்: சென்னை எண்ணூர் அருகே பெரியகுப்பம் பகுதியில் தொழிற்சாலையில் இருந்து வாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல்-உடல்நல பாதிப்பு- வீடுகளை விட்டு வெளியே வந்த மக்கள், 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெரியகுப்பம் மீனவ கிராம பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறினர். அருகில் உள்ள கிராம மக்களும் அச்சத்தின் காரணமாக ஆட்டோ, பைக் உள்ளிட்ட இருசக்கர வாகனங்களில் வெளியேறுகின்றனர். கப்பல்களில் இருந்து திரவ அமோனியா கொண்டு வரும் குழாயில் கசிவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post சென்னை எண்ணூர் அருகே பெரியகுப்பம் பகுதியில் தொழிற்சாலையில் இருந்து வாயுக் கசிவு appeared first on Dinakaran.

Tags : Peryakupam ,Toloor, Chennai ,Tolur ,Peryagupam ,Dinakaran ,
× RELATED கல்லூரி மாணவன் ஏரியில் மூழ்கி பலி