×

நாங்குநேரி பகுதியில் மழையால் சேதம் குளங்கள் சீரமைப்பு பணியை யூனியன் சேர்மன் ஆய்வு

நெல்லை, டிச.27: தென் மாவட்டங்களை புரட்டிப்போட்ட வெள்ளம் நாங்குநேரி வட்டாரத்தையும் விட்டு வைக்க வில்லை. நாங்குநேரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல குளங்களில் நிரம்பி உடைந்து தண்ணீர் வீணானது. சில குளங்கள் உடையாமல் இருப்பதற்காக திறந்து விடப்பட்டது. உடைந்த குளங்களை நாங்குநேரி யூனியன் சேர்மன் சௌம்யாஆரோக்கிய எட்வின் நேரில் சென்று பார்வையிட்டு சரி செய்ய உத்தரவிட்டார். அதன் பயனாக தற்போது மிகவும் பாதிக்கப்பட்ட கோர்க்கனேரி குளம், குசவங்குளம் குளம், இளையார்குளம் குளம், உன்னங்குளம் குளம், தோரணகுறிச்சி குளம் சடையனேரி குளம் ஆகிய குளங்கள் சீரமைக்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது என தெரிவித்தார். மீதமுள்ள அனைத்து குளங்களுக்கும் அடுத்த கட்ட பூர்வாங்க பணிகள் தொடங்கி விட்டதாக அவர் தெரிவித்தார்.

The post நாங்குநேரி பகுதியில் மழையால் சேதம் குளங்கள் சீரமைப்பு பணியை யூனியன் சேர்மன் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Union Sherman ,Nanguneri ,Nella ,Nanguneri district ,Nanguneri Local Union ,Dinakaran ,
× RELATED இந்திய அளவில் 576வது இடம் பிடித்து...