×

பக்தர்கள் பௌர்ணமி கிரிவலம்

பாப்பிரெட்டிப்பட்டி, டிச. 27: பாப்பிரெட்டிப்பட்டி அருகே, பையர்நத்தம் கிராமத்தில் பாலமுருகன் கோயில் உள்ளது. இக்கோயிலின் அடிவாரத்தில் ஸ்ரீ அமிர்தேஸ்வரர், அமிர்தாம்பிகை கோயிலில் மார்கழி மாத பௌர்ணமியை முன்னிட்டு சுவாமிக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் மயிலை மலையைசுற்றி கிரிவலம் சென்று மூலவரை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

The post பக்தர்கள் பௌர்ணமி கிரிவலம் appeared first on Dinakaran.

Tags : Poornami Krivalam ,Pappyrettipatti ,Balamurugan ,Byyarnatham ,Paprirettipatti ,Sri Amrideswarar ,Amritambikai ,
× RELATED கோடை உழவு செய்து பயன் பெற அழைப்பு