×

டிரோன் தாக்குதலுக்கு உள்ளான கப்பல் மும்பை வந்தது

புதுடெல்லி: செங்கடல் பகுதியில் இந்திய நாட்டு கொடியுடன் வந்த எம்வி சாய்பாபா எனும் வணிக கப்பல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் மங்களூரு நோக்கி கச்சா எண்ணெய் ஏற்றி வந்த இஸ்ரேலைச் சேர்ந்த எம்வி கெம் புளூட்டோ என்ற வணிக கப்பல் மீது ஹவுதி போராளிகள் கடந்த சில நாட்களுக்கு முன் அடுத்தடுத்து டிரோன் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 45 இந்திய மாலுமிகள் உயிர் தப்பினர். இந்நிலையில், எம்வி கெம் புளூட்டோ 2 நாட்களுக்கு பின் மும்பை துறைமுகத்துக்கு நேற்று வந்தது. இந்த கப்பலை ஆய்வு செய்த கடற்படை அதிகாரிகள், டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதை உறுதி செய்தனர். இன்று கப்பல் முழு ஆய்வை மேற்கொள்ள உள்ளனர். இந்நிலையில், அரேபிய கடல் பகுதியை கண்காணிக்க இந்திய கடற்படை சார்பில் பி-8I ரோந்து விமானத்தையும், ஐஎன்எஸ் மோர்முகவோ, கொச்சி கொல்கத்தாஆகிய போர்க்கப்பல்கள் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது.

The post டிரோன் தாக்குதலுக்கு உள்ளான கப்பல் மும்பை வந்தது appeared first on Dinakaran.

Tags : Mumbai ,New Delhi ,Red Sea ,Arabian Sea ,
× RELATED பிரமோத் மகாஜன் மகள் பூனம் மகாஜனுக்கு சீட் மறுத்தது பா.ஜ