×

கனமழையால் பாதிக்கப்பட்ட ரூ.5 லட்சம் காரை பழுதுநீக்க ரூ.8 லட்சம்: உரிமையாளர் அதிர்ச்சி

 

சென்னை, டிச.25: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிக்ஜாம் புயல், கனமழையால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தண்ணீரில் மிதந்தன. இதனால் பழுதடைந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்களை பழுது நீக்க, வாகன ஷோரூம்களில் அதன் உரிமையாளர்கள் ஒப்படைத்துள்ளனர். இந்த வாகனங்களை பழுது நீக்க இன்சூரன்ஸ் நிறுவனங்களின் உதவியை உரிமையாளர்கள் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள். ஆழ்வார்பேட்டையை சேர்ந்தவர் சுமதி அன்பரசு. காங்கிரஸ் நிர்வாகியான இவரது காரும் தண்ணீரில் சிக்கியது.

அந்த காரை பழுது நீக்குவதற்காக அம்பத்தூரில் ஒரு ஷோரூமில் விட்டிருக்கிறார். அந்த காரை பழுது நீக்க சுமார் ரூ.8 லட்சம் செலவாகும் என்று மதிப்பிட்டுள்ளார்கள். இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் கேட்டபோது ரூ.4 லட்சம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்கள். சரி, அந்த காரை விற்றால் எவ்வளவு கிடைக்கும் என்று மதிப்பிட்ட போது ரூ.5 லட்சம் என்று மதிப்பிட்டுள்ளார்கள். இதனால் திகைத்து போன சுமதி, இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் அவர்கள் தர ஒப்புக்கொண்டுள்ள ரூ.4 லட்சத்தையாவது தந்தால் மீதி பணம் போட்டு வேறு காராவது வாங்கலாம் என்று நினைத்துள்ளார்.

ஆனால், பணத்தை உங்களுக்கு தர முடியாது. பழுது நீக்கும் நிறுவனத்துக்குத் தான் கொடுக்க முடியும், என்று கூறியிருக்கிறார்கள். இன்சூரன்ஸ் கட்டுவது நான்தானே. பணத்தை என்னிடம் தருவது நியாயம் தானே என்று கேட்டுள்ளார். ஆனால், அதற்கு அவர்கள் மறுத்துள்ளனர். ரூ.5 லட்சம் மதிப்புள்ள காருக்கு ரூ.8 லட்சத்தை செலவழிப்பதில் எந்த நன்மையும் கிடையாது. எனவே என்ன செய்வது என்று தெரியாமல் அவர் புலம்பி வருகிறார்.

The post கனமழையால் பாதிக்கப்பட்ட ரூ.5 லட்சம் காரை பழுதுநீக்க ரூ.8 லட்சம்: உரிமையாளர் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,SUBURBS ,Dinakaran ,
× RELATED சசிகலா ஒரு வெற்று பேப்பர்: ஜெயக்குமார் கிண்டல்