×

கோவை ரயில் நிலைய தேசிய கொடியில் அசோக சக்கரம் நிறம் மாறியது

 

கோவை, டிச. 25: நாடு முழுவதும் மக்கள் அதிகம் கூடும் 75-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் 100 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு பெரிய அளவிலான தேசிய கொடி பறக்கவிடப்படும் என ரயில்வே வாரியம் அறிவித்தது. அதன்படி, தென்க ரயில்வே எல்லைக்கு உட்பட்ட சேலம் கோட்டம் கோவை ரயில்நிலையத்தின் நுழைவு வாயிலில் 100 அடி உயர கொடி கம்பம் கடந்த 2019ல் அமைக்கப்பட்டது. இந்த பிரமாண்ட கம்பத்தில் 30 அடி நீளம், 20 அடி அகலம் கொண்ட தேசிய கொடி உள்ளது. காற்று, மழை உள்ளிட்ட காரணங்களினால் சில நேரங்களில் தேசிய கொடி சேதமடைகிறது.

அதனை அதிகாரிகள் மாற்றுவார்கள். இந்நிலையில், ரயில்நிலைய நுழைவு வாயிலில் நேற்று பறந்து கொண்டிருந்த தேசிய கொடியின் அசோக சக்கரம் நீல நிறத்திற்கு பதிலாக, ஊதா நிறத்தில் இருந்தது. இதனை பார்த்த காந்திமாநகர் ஹட்கோ காலனி பகுதியை சேர்ந்த ரயில் பயணி பழனிச்சாமி என்பவர், தேசிய கொடியில் அசோக சக்கரம் நீல வண்ணத்தில் தான் இருக்க வேண்டும். தேசிய கொடியில் வண்ணங்கள் மாறக்கூடாது என வலியுறுத்தி ரயில் நிலைய இயக்குனரிடம் புகார் அளித்தார். சென்னையில் இருந்து தேசியக்கொடி வருவதாகவும், உடனடியாக மாற்றப்படும் எனவும் இயக்குனர் அவரிடம் தெரிவித்துள்ளார்.

The post கோவை ரயில் நிலைய தேசிய கொடியில் அசோக சக்கரம் நிறம் மாறியது appeared first on Dinakaran.

Tags : Ashoka ,Gowai ,railway station ,COVE ,Choi railway station ,
× RELATED சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநில பெண் மர்ம மரணம்..!!