×

பெரியகுளத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாரத்தான் போட்டி

பெரியகுளம், டிச. 24: பெரியகுளத்தில் காவல்துறையின் சார்பாக, போதைப் பொருள் தடுப்பு மற்றும் குழந்தை திருமண தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தேனி மேற்கு தொடர்ச்சி மலை மாரத்தான் போட்டிகள் நடைபெற்றது. இதில் 2, 4, 6, 8, 10, 21 கிலோமீட்டர் தூரத்தில் ஆறு பிரிவுகளின் கீழ் தனித்தனியே போட்டிகள் நடைபெற்றது.இப்போட்டியில் திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், ஆகிய மாவட்டங்களில் இருந்தும் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

போட்டியை கலெக்டர் ஷஜீவனா, மாவட்ட எஸ்பி பிரவீன் உமேஷ் டோங்ரே ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். இதில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த வீரர், வீராங்கனைகளுக்கு 3000 ரூபாய், 2000 ரூபாய், 1000 ரூபாய் என ரொக்க பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் வழங்கினர். மேலும் பங்கேற்ற அனைத்து வீரர் வீராங்கனைகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் இப்போட்டியில், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

The post பெரியகுளத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாரத்தான் போட்டி appeared first on Dinakaran.

Tags : Western Ghats Marathon ,Periyakulam ,
× RELATED வத்தலக்குண்டு- பெரியகுளம் சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் அவதி