×

தனியார் விடுதியில் டாக்டர் மர்மச்சாவு திண்டுக்கல்லில் பரபரப்பு

திண்டுக்கல், டிச. 24: திண்டுக்கல் கோவிந்தாபுரம் சமயபுரம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மனோஜ் ரத்தினமாணிக்கம் (43). சித்தா டாக்டர். இவருக்கு திருமணமாகி பாக்கிய என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் கடந்த சில மாதமாக திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார்.

இந்தநிலையில் நேற்று விடுதியில் இருந்து நீண்ட நேரமாகியும் மனோஜ் ரத்தினமாணிக்கம் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனே திண்டுக்கல் நகர் மேற்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எஸ்ஐ முத்துமணி வழக்குப்பதிவு செய்து மனோஜ் ரத்தினமாணிக்கம் இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post தனியார் விடுதியில் டாக்டர் மர்மச்சாவு திண்டுக்கல்லில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Dr. ,Marmachau ,Dindigul ,Manoj Rathinamanickam ,Dindigul Govindapuram Samayapuram Mariamman Koil Street ,Siddha Dr.… ,Dinakaran ,
× RELATED தொப்பையால் உருவாகும் நோய்கள்!