×

மகாராஷ்டிரா முதல்வருடன் நடிகர் ராம் சரண் திடீர் சந்திப்பு

மும்பை: தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகனும், தெலுங்கு இளம் முன்னணி நடிகருமான ராம் சரண், தனது குடும்பத்தினருடன் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை திடீரென்று சந்தித்துப் பேசியதால், ராம் சரண் அரசியலில் ஈடுபட ஆயத்தமாகி வருவதாக அரசியல் மற்றும் திரையுலக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது ஷங்கர் இயக்கும் ‘கேம் சேஞ்சர்’ என்ற பான் இந்தியா படத்தில் நடிக்கும் ராம் சரண், தனது சமூக வலைத்தளத்தில் போட்டோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த போட்டோவில் சிவசேனா தலைவரும், மகாராஷ்டிரா முதல்வருமான ஏக்நாத் ஷிண்டேவை, மகாராஷ்டிரா முதல்வர் இல்லத்தில் ராம் சரண், அவரது மனைவி உபாசனா காமினேனி ஆகியோர் சந்தித்த காட்சி இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு நடந்தபோது, ராம் சரண் தம்பதியரை மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும், ராம் சரணுக்கு சால்வை ஒன்றையும் அணிவித்தார். உபாசனா காமினேனிக்கு நெற்றியில் திலகம் வைத்து, ஆரத்தி எடுக்கப்பட்டது. பிறகு அவர்கள் பரஸ்பரம் பரிசுப் பொருட்களை பரிமாறிக்கொண்டனர். இந்த சந்திப்பு நடந்தபோது எடுக்கப்பட்ட போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது. ராம் சரண், உபாசனா காமினேனி ஆகியோரிடம், ‘நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா?’ என்று ரசிகர்களும், நெட்டிசன்களும் ஆர்வத்துடன் கேள்வி எழுப்பி aவருகின்றனர். ஆனால், இந்த திடீர் சந்திப்பு குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இதனால், பல்வேறு விதமான அரசியல் யூகங்கள் கிளம்பி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post மகாராஷ்டிரா முதல்வருடன் நடிகர் ராம் சரண் திடீர் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Ram Charan ,Chief Minister ,Maharashtra ,Mumbai ,Chiranjeevi ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...