×

முன்னாள் அமைச்சர் பொன்முடியின் சொத்துக்கள் முடக்கம் நீக்கப்பட்டது செல்லும்: லஞ்ச ஒழிப்பு துறை மேல் முறையீடு ஐகோர்ட்டில் தள்ளுபடி

சென்னை: அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக 2011ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. அப்போது அவரது சொத்துக்களை லஞ்ச ஒழிப்புத்துறை முடக்கியது. இந்த முடக்கத்தை நீக்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. சொத்து முடக்கத்தை நீக்கி சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தவறாக இருந்தாலும், மேல் முறையீட்டு வழக்கில் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதால் முந்தைய உத்தரவு நீடிக்காது. எனவே, லஞ்ச ஒழிப்புத் துறை மேல் முறையீட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. புதிதாக சொத்து முடக்க நடவடிக்கைகளை எடுக்க, இந்த தள்ளுபடி உத்தரவு தடையாக இருக்காது என்று நீதிபதி உத்தரவிட்டார்.

The post முன்னாள் அமைச்சர் பொன்முடியின் சொத்துக்கள் முடக்கம் நீக்கப்பட்டது செல்லும்: லஞ்ச ஒழிப்பு துறை மேல் முறையீடு ஐகோர்ட்டில் தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Ex-minister ,Ponmudi ,Anti-corruption department ,High Court ,Chennai ,-corruption ,minister ,Visalakshi ,ICourt ,Dinakaran ,
× RELATED சென்னை, கோவை மாநகராட்சி டெண்டர்...