- சசிகலா
- முன்னாள் அமைச்சர்
- உதயகுமார் விலாசல்
- வாடிப்பட்டி
- அஇஅதிமுக
- முன்னாள் அமைச்சர்
- உதயகுமார்
- முன்னாள்
- அமைச்சர்
- சமயநல்லூர், மதுரை மாவட்டம்
- உதயகுமார் விளாசல்
வாடிப்பட்டி: அதிமுகவை ஒன்றிணைப்பதாக கூறி சசிகலா செல்வது சுற்றுப்பயணம் அல்ல. சுற்றுலா பயணம் என அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார். மதுரை மாவட்டம், சமயநல்லூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: சசிகலா தற்போது துவங்கியுள்ளது சுற்றுப்பயணம் அல்ல. அது சுற்றுலாப் பயணம். அவர் 33 ஆண்டுகள் ஆளுமையில் இருந்தபோது அவர் சார்ந்த இனத்திற்கு எதுவும் செய்யவில்லை.
அவர்களை பின்புலமாக பயன்படுத்தி, அவர் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற்றத்தை கண்டார். அவர் தமிழ்நாடு முழுவதும் அறிவிப்பு விட்டு சுற்றி வந்தாலும். அவரை சுற்றி யாரும் வர மாட்டார்கள். எஸ்டிஎஸ், சேடபட்டி முத்தையா, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களின் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியானதற்கு முதல் காரணமே சசிகலா தான். தற்போது அவர் ஆடி மாதத்தில் தனது சுற்றுப்பயணத்தை துவக்கி உள்ளார் அது சுற்றுப்பயணம் அல்ல. சுற்றுலாப் பயணம்.
இனி அதிமுகவின் தொண்டர்களும், நிர்வாகிகளும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவரிடம் உள்ள ஒரு சில நிர்வாகிகளிடம் நான் கேட்கிறேன். அவர் கட்சியிலும், ஆட்சி அதிகாரத்திலும் இருந்தபோது அதிமுக தொண்டர் யாராவது அவரால் பயனடைந்திருப்பாரா? இனி அவர் சுற்றுப்பயணம் செல்வதும், தொண்டர்களுக்கு நல்லது செய்வேன் என்பதும் கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் போன்று உள்ளது.
2021 தேர்தலின்போது அரசியலை விட்டு முழுமையாக விலகுவதாக தெரிவித்த சசிகலா, தற்போது மீண்டும் அரசியலில் குதிப்பதாக கூறுவதை எப்படி நம்புவது? கருவாடு மீன் ஆகாது. கறந்த பால் மடி புகாது என்பதற்கு சமமானதே, அவரை மீண்டும் அதிமுகவில் இணைப்பது என்பது. அதற்கு சாத்தியமில்லை. அவர் இனியும் அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று கூறுவது தொண்டர்களை அவமதிக்கும் செயல். நீதிமன்றத்தையும், தேர்தல் ஆணையத்தையும் அவமதிக்கும் செயல். இவ்வாறு அவர் கூறினார்.
The post கருவாடு மீனாகாது; கறந்த பால் மடி புகாது சசிகலா செல்வது சுற்றுப்பயணம் அல்ல… அது, சுற்றுலாப் பயணம்: மாஜி அமைச்சர் உதயகுமார் விளாசல் appeared first on Dinakaran.