×

பலசரக்கு கடையில் தீ விபத்து; பொருட்கள் எரிந்து நாசம்

சாத்தூர், டிச.23: சாத்தூர் முனியசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம்(54). இவர் சாத்தூர் காய்கறி மார்க்கெட்டில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். வழக்கம் போல நேற்று வியாபாரம் நடந்து வந்தது. மாலை 6 மணியளவில் கடையில் உள்ள கடைசி அறையில் புகை வந்துள்ளது. அங்கு சென்று பார்த்த போது பலசரக்கு பொருட்களில் தீ பிடித்து எரிந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து சாத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அனைத்தனர். தீ விபத்தில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.

The post பலசரக்கு கடையில் தீ விபத்து; பொருட்கள் எரிந்து நாசம் appeared first on Dinakaran.

Tags : Chatur ,Ramalingam ,Muniyasamy Temple Street, Chatur ,Dinakaran ,
× RELATED சாத்தூர் அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 5 பேர் கைது