×

6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கான சிறப்பு தற்காப்பு கலை பயிற்சி

மதுரை, டிச. 23: மதுரை மாவட்டத்தில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு கலை பயிற்சிகள் அளிக்கப்பட இருக்கிறது. மதுரை மாவட்ட பள்ளிகளில், மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறைகளின் படி 2023-24ம் கல்வியாண்டிற்கான பெண் கல்வி சார்ந்து, 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கான தற்காப்பு கலை பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக மாவட்டத்தில் உள்ள 441 பள்ளிகளிலும் கராத்தே, ஜூடோ, டேக் வாண்டோ மற்றும் சிலம்பம் போன்ற பயிற்சிகளில் ஏதேனும் ஒன்று மாணவிகளுக்கு வழங்கப்பட இருக்கிறது.

ஒவ்வொரு பள்ளியிலும், வாரத்தில் ஏதேனும் இரு நாட்களில் மாநிலத் திட்ட இயக்ககத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தின் அடிப்படையில் மூன்று மாதங்களுக்கு இப்பயிற்சி வகுப்புகள் நடைபெறும். குறிப்பாக மாணவிகளுக்கான பயிற்சி என்பதால், பெண் பயிற்றுநர்களை தேர்வு செய்வதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பெண் பயிற்றுநர்கள் இல்லாத நிலையில் பயிற்சியை ஆசிரியைகள் துணையுடன் நடத்தவும் அறிவுத்தப்பட்டுள்ளது.

The post 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கான சிறப்பு தற்காப்பு கலை பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Madurai ,Madurai District ,Karate ,Silambam ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை