×

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தி.நகர் திருப்பதி தேவஸ்தானத்தில் சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடு

சென்னை: சென்னை, தி. நகரில் அமைந்துள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பக்தர்களுக்கு சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னை, தி. நகரில் அமைந்துள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கட நாராயண கோயிலில் இன்று வைகுண்ட ஏகாதசி விழா மிக விமர்சையாக நடைபெற உள்ளது. அதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காலை 5 மணி முதல் பக்தர்களுக்கு தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 10 முதல் 10.30 வரை நெய்வேத்தியம் நடைபெறும்.

அப்போது பக்தர்களுக்கு தரிசனம் மாட்டாது. மதியம் 2 மணி முதல் 3 மணி வரை கோயில் சுத்தம் செய்வதால் அப்போது ஒரு மணி நேரம் கோயிலில் பக்தர்கள் அனுமதி இல்லை. அதேபோன்று மாலை 5.30மணி முதல் 6 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை மற்ற நேரங்களில் தொடர்ந்து பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்களுக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து 30 ஆயிரம் வர வைக்கப்பட்டுள்ளது. இது கோவில்களில் வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.

The post வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தி.நகர் திருப்பதி தேவஸ்தானத்தில் சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Tirupati Devasthanam ,T. Nagar ,Vaikunda Ekadasi ,Chennai ,Tirumala Tirupati Devasthanam ,Tirupati ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை...